என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
சுப்மான் கில்லுக்கு தலைவலியை ஏற்படுத்தும் பவுலர்: விவரிக்கிறார் கிரேக் சேப்பல்
- சுப்மான் கில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்ப்பு
- ஆஸ்திரேலியாவில் ஸ்டார்க், ஹேசில்வுட் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர்
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா முடிந்த கையோடு இந்திய அணியில இடம் பிடித்துள்ள வீரர்கள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளனர். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியனுக்காக பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த ஆட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த முறை இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் வாய்ப்பை இழந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த முறை இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் சமீபகாலமாக அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் அசத்தினார்.
ஆனால், அவர் இந்த விசயத்தில் ஆட்டம் கண்டுவிடுவார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிரேக் சேப்பல் கூறியதாவது:-
நான் சுப்மான் கில்லை ஆஸ்திரேலியாவில் வைத்து பார்த்து இருக்கிறேன். இந்தியாவில் உலக கிரிக்கெட்டில் மற்ற அணிகளை விட சிறப்பாக இருக்க காரணம், அவர்கள் ஏராளமான ஆட்டங்களில் விளையாடி முன்னேற்றம் அடைகிறார்கள். அவர்கள் அதிக அளவில் வெளிநாட்டு தொடரில் விளையாடுவதை உறுதி செய்கிறார்கள். ஆகவே, சுப்மான் கில் வெளிநாட்டில் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவர் இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியா சிறப்பாக பந்து வீசினால், இங்கிலாந்து சூழ்நிலையில் எந்தவொரு பேட்ஸ்மேனும் திணறுவதுபோல் அவரும் திணறுவார். மிட்செல் ஸ்டார்க் போன்று கூடுதல் வேகம் மூலம் சுப்மான் கில்லை திணறடிக்க முடியும். கூடுதல் வேகம் சிறந்த பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்யும். அதேபோல் எக்ஸ்ட்ரா பவுன்சரும் சிறந்த வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும்.
ஹேசில்வுட் உடற்தகுதி பெற்று விளையாடினால், அது சுப்மான் கில்லுக்கு தொந்தரவு கொடுப்பார். ஹேசில்வுட் விளையாடவில்லை என்றால், போலந்து விளையாட வாய்ப்புள்ளது. அவரும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. அவர் சரியான லைனில் பந்து வீசுகிறார். இங்கிலாந்து சூழ்நிலையில் அவரது பந்து வீச்சு சிறந்த லெந்த் ஆகவும் இருக்கும்.
சுப்மான் கில் தொடக்கத்தில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் செல்லும் பந்து மீது கவனம் செலுத்துவார். பந்து சற்று பவுன்சரானால், க்ரீஸ் உள் நின்று விளையாடுவார். நான் பார்த்த இந்த சிறிய விசயத்தை ஆஸ்திரேலியாவை அறிந்திருக்க வேண்டும் என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்