search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முதல் டி20 போட்டி: இந்தியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே
    X

    முதல் டி20 போட்டி: இந்தியாவை வீழ்த்தியது ஜிம்பாப்வே

    • முதலில் ஆடிய ஜிம்பாப்வே 115 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய இந்தியா 102 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஹராரே:

    ஜிம்பாப்வே, இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இன்று நடக்கிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய கிளைவ் மதானே 29 ரன்கள் எடுத்தார். பிரையன் பென்னட் மற்றும் டியான் மேயர்ஸ் ஆகியோர் 23 ரன்கள் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் 4 ஓவரில் 2 மெய்டன் உள்பட 13 ரன்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். வாஷிங்டன் ஓரளவு ஆடி 27 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.

    டி20 தொடரில் ஜிம்பாப்வே 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ராசா, சதாரா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    Next Story
    ×