search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    விராட் கோலியின் உலக சாதனையை தகர்த்த ஜிம்பாப்வே வீரர் ராசா
    X

    ராசா - விராட் கோலி

    விராட் கோலியின் உலக சாதனையை தகர்த்த ஜிம்பாப்வே வீரர் ராசா

    • பாகிஸ்தானுக்கு எதிராக 3 முக்கிய விக்கெட்டுகளை ராசா கைப்பற்றினார்.
    • ஜிம்பாப்வேயின் கடைசி 4 வெற்றிகளில் 3 ஆட்டநாயகன் விருதுகளை ராசா தட்டிச் சென்றுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 24-வது லீக் போட்டியில் யாருமே எதிர்பாராத வகையில் பாகிஸ்தானை கத்துக்குட்டியாக கருதப்படும் ஜிம்பாப்வே வெறும் 1 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து வரலாறு படைத்தது.

    இந்த வெற்றியால் 2 போட்டிகளில் 3 புள்ளிகளை பெற்ற ஜிம்பாப்வே புள்ளி பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் 2 போட்டிகளில் தோல்வியடைந்த பாகிஸ்தான் நாக்-அவுட் செல்லும் வாய்ப்பையும் குறைத்துக் கொண்டுள்ளது.

    ஜிம்பாப்வேயின் இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 9 ரன்கள் எடுத்தாலும் பந்து வீச்சில் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்த சிக்கந்தர் ராசா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். உலகக்கோப்பை போட்டியில் சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்கள் கலங்கி விவரிக்க வார்த்தைகள் இல்லை என்று போட்டியின் முடிவில் நெகிழ்ச்சியாக பேசினார். மேலும் இவர் பாகிஸ்தானில் பிறந்து இன்று அந்நாட்டுக்கு எதிராகவே சம்பவம் செய்து மிரட்டியுள்ளார்.

    ஜிம்பாப்வேயின் கடைசி 4 வெற்றிகளில் 3 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ள அவர் இந்த வருடம் மட்டும் டி20 கிரிக்கெட்டில் 7 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக ஆட்டநாயகன் விருதுகளை வென்ற வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை தகர்த்த அவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

    1. சிக்கந்தர் ராசா : 7* (2022)

    2. விராட் கோலி : 6 (2016)

    3. சூர்யகுமார் யாதவ் : 5 (2022)*

    4. முகமது ரிஸ்வான் : 5 (2021)

    5. ஷேன் வாட்சன் : 5 (2012)

    Next Story
    ×