என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிக களஞ்சியம்
திருக்கழுக்குன்றம் கோவில் அமைப்பு
- திருக்கழுகுன்றத்தில் கிரிவலம் வருவதால் தூய காற்றை உட்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறோம்.
- இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கின்றோம். ஆங்காங்குள்ள சுனை நீர்களில் குளிப்பதால் உடல் தூய்மை பெறுகிறது.
திருக்கழுக்குன்றம் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இதை அங்குள்ள ராசராசசோழன் (பி.பி.985-1014) கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
கருவறையில் உள்ள இறைவன் பெயர் வேதகிரியீசுவரர். இறைவி பெயர் திரிபுர சுந்தரி என்பதாகும்.
கருவறையில் நான் முகன், திருமால், நந்தி தேவர், தட்சிணாமூர்த்தி, இந்திரன் ஆகியோர் திருவுருவங்கள் உள்ளன.
கோவிலின் உள் சுற்றில் சொக்கம்மன் கோவிலும் உள்ளது.
இறையின் தன்மை:
வேதகிரி ஈசுரரை எவரும் புதுப்பிக்கவில்லை. தானே உண்டானவர்.
இவர் எண்கோண வட்டமாகவோ, நாற் கோணமாகவோ, வட்டமாகவோ நீளமாகவோ காணப்படவில்லை. இறைவன் திருவுருவம் வாழைக் குருத்து போல் காணப்படுகிறது.
இத்தலத்தின் மரம் வாழையேயாகும். இவ்விறைவனையும் வழிபடுவோர் தொன்று தொட்டு வந்த வல்வினையை விரைவில் விலக்கிக் கொள்வர்.
கிரிவல பலன்கள்
திருக்கழுகுன்றத்தில் கிரிவலம் வருவதால் தூய காற்றை உட்கொள்ளும் வாய்ப்பைப் பெறுகிறோம்.
இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்கின்றோம். ஆங்காங்குள்ள சுனை நீர்களில் குளிப்பதால் உடல் தூய்மை பெறுகிறது.
வந்த நோய் விலகுகிறது. பிணிகளை நீக்கும் மூலிகைப் பொருள்களையும், அவற்றின் தன்மைகளையும் நேரில் கண்டறிய முடியும்.