என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தோஷ பரிகாரங்கள்
பிரம்மஹத்தி தோஷம் யாருக்கெல்லாம் வரும்... அதனால் ஏற்படும் விளைவுகள்...
- இந்த தோஷம் நெஞ்சை பதை பதைக்க வைக்கும் பாதங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
- தோஷம் உள்ளவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.
மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான வாழ்க்கை அமைகிறது. ஒரு சிலருக்கு வெற்றி வாய்ப்பு வீடு தேடிவந்து அழைக்கிறது. ஒரு சிலருக்கு வாய்ப்பை தேடிப் போனாலும் கிடைப்பது இல்லை. என்ன உழைத்தாலும், அதற்கு உரிய பலன்கள் கிடைக்காமல் போகின்றன. இதற்கு பலவகையான தோஷங்கள் காரணமாக இருந்தாலும், குறிப்பாக பிரம்மஹத்தி தோஷம்தான் முக்கிய காரணம் என்கிறார்கள். 'பிரம்மஹத்தி தோஷம்' என்பது, நெஞ்சை பதை பதைக்க வைக்கும் கொடுமையான பஞ்ச மகா பாதங்களைச் செய்வதால் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் சொல்கின்றன.
பூமியில் ஒரு உயிர் ஜனனமாக காரணமாக இருக்கும் பிரபஞ்ச சக்திக்கே அந்த உயிரை எடுத்துக் கொள்ள உரிமை இருக்கிறது. சக மனிதர்கள் ஒரு உயிருக்கு தீங்கு விளைவித்தால், பாதிப்பை ஏற்படுத்தினால், உருவாகும் தோசமே பிரம்மஹத்தி தோசமாகும். ஏதோ ஒரு காரணத்தால் ஒருவரை கொலை செய்வது அல்லது அதற்கு சமமான பாவங்கள் செய்தவருக்கே இந்த தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் யாருக்கெல்லாம் வரும் என்றும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்.
1. கருச்சிதைவு செய்தவருக்கும் அதற்கு உதவிய மருத்துவருக்கும் வரும். அவர்களுக்கு குழந்தையின்மை ஏற்படும். அப்படி குழந்தை பிறந்தாலும் வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தையால் காலம் முழுவதும் நிம்மதியின்மை ஏற்படும்.
2.பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்கு கொடுத்து, ஏமாற்றி திருமணம் செய்யாமல் இருப்பவருக்கு திருமணமே நடக்காத நிலை, அப்படி நடந்தாலும் அந்த திருமண வாழ்க்கை நரக வேதனை தருவதாக இருக்கும்
3.பலரின் உழைப்பை உறிஞ்சி, அதற்குரிய ஊதியம் தராமல் இருப்பது. உழைத்த வேர்வை காயும் முன்பு கூலி கொடுக்காதவர்களுக்கு வரும். இந்த தோஷத்தால் தொழில் சரிவர அமையாமை, தொழில் நட்டம், வேலை இல்லா நிலை ஏற்படும்.
4.குருவுக்கு தட்சிணை தராமல் இருப்பது குருவின் கொள்கை பிடிக்காமல் தானே குருவாக மாறுபவர்களுக்கு, எந்த முகாந்திரமும் இல்லாமல் பிராமணர்களை துன்புறுத்தினால், வருத்தம் ஏற்படுத்தினால், அவர்களுக்கு அல்லது அவர்களது குழந்தைகளுக்கு கற்ற கல்வியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். குல தெய்வ சாபத்தை விட குரு சாபம், பிராமண சாபம் மிக கொடியது. பிராமண குலத்தில் பிறந்த ராவணனனை ராமர் கொன்றதால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.
5.வெள்ளிக்கிழமைகளில் நல்ல பாம்பை அடிப்பவர்களுக்கு பண இழப்பு ஏற்படும். வேற்று மதத்தினர் அல்லது அந்நிய பாஷை பேசுபவர்களால் தொல்லை ஏற்படும். இவர்களுடைய குழந்தைகள் கலப்பு திருமணம் செய்து கொண்டு வாழ்வை தொலைத்து விடுகிறார்கள்.
6. ஆலயத்தை தகர்த்தல், சாமி சிலையை திருடுதல், குல தெய்வ சொத்தை கொள்ளை அடித்தவர்களுக்கு, பங்காளி தகராறில் குல தெய்வ கோவிலை மூடியவர்களுக்கு கடவுள் அனுக்கிரகம் இருக்காது.
7. கட்டிய மனைவிக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரத் தவறியவரால் தன் அடிப்படை தேவையை கூட நிறைவு செய்ய முடியாத நிலை ஏற்படும். மேலும் பெற்றோருக்கு உணவளிக்காமல் விரட்டி அடிப்பவருக்கு, கறவை நின்ற பசுவைக் கசாப்புக்கு அனுப்புபவருக்கு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்பவருக்கும், நன்றி மறந்தவர்களுக்கும் இந்த தோஷம் ஏற்படுகிறது. அதனால் வருடக் கணக்கில் மனக்குழப்பம், தவறே செய்யாமல் தண்டணை அனுபவிப்பது, மருத்துவத்திற்குக் கட்டுப்படாத நோய், வறுமை, அங்கீகாரம் இன்மை, குடும்பத்தில் மரியாதை இன்மை, நடத்தி வரும் தொழிலுக்கு வேலையாட்கள் கிடைக்காத நிலை போன்றவை பல ஆண்டுகள் நீடிக்கும். சமூகத்தில் திறமை இருந்தும் நல்ல நிலையை அடைய முடியாமல் தடுமாறிக் கொண்டு இருப்பார்கள். ஒருவரின் உயிரை எடுத்தால் மனம் என்ன பாடுபடுமோ அதேபோல் இந்த தோசம் இருப்பவர்களின் மனமும் இருக்கும். இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்