search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    நாளை மூலை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கும்...
    X

    நாளை மூலை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்தால் திருமண தடை நீங்கும்...

    • சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
    • பங்குனி அமாவாசை அன்று மூலை அனுமாரை மீன ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.

    தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு லட்சம் ராம நாமம் ஜெபமும், அதைத்தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாக்கும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு வடை மாலைகளாலான சிறப்பு அலங்காரமும், 6.30 மணிக்கு முகூர்த்த அர்ச்சனையும் நடைபெறுகிறது. அந்த சமயம் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மூலை அனுமாருக்கு குங்குமம், மஞ்சள், செந்தூரம் கொண்டு வந்து தந்து முகூர்த்த அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    இதைத்தொடர்ந்து கோவிலை 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலையை சாற்றி தீபாராதனையும் நடைபெறுகிறது. பங்குனி அமாவாசை அன்று மூலை அனுமாரை மீன ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×