search icon
என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    வாஸ்து மூலை: வாஸ்துவில் கிழக்கு திசையின் சிறப்பு
    X

    வாஸ்து மூலை: வாஸ்துவில் கிழக்கு திசையின் சிறப்பு

    • வீட்டின் கிழக்கு திசையில் காலியிடம் இருக்க வேண்டும்.
    • கிழக்கும் வடக்கும் சேரும் மூலையை ஈசான்யம் என்பார்கள்.

    * கிழக்கு பாகத்தின் பலன்கள் ஆண்களுக்குரியது . கிழக்கு பாகம் பொதுவாக தாழ்வாக இருக்க வேண்டும். வீட்டின் கிழக்கு திசையில் காலியிடம் இருக்க வேண்டும். இதனால் உடல் நலம், பொருளாதாரம் மற்றும் வம்ச விருத்தி உண்டாகும். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் கிழக்கிலிருந்து வெளியேறினால் அந்த வீட்டு ஆண்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கும். கிழக்கில் கிணறு, செப்டிக்டங்க் இருந்தால் நன்மைகள் உண்டாகும்.

    * கிழக்கும் வடக்கும் சேரும் மூலையை ஈசான்யம் என்பார்கள். எல்லா திசைகளிலும் சிறந்தது ஈசான்ய மூலை. வீட்டின் ஒவ்வொரு அறையிலும் ஈசான்ய மூலை தூய்மையாக இருக்க வேண்டும். கனமான பொருட்கள் இருக்கக் கூடாது மற்றும் தடுப்புகள் இருக்கக் கூடாது. வீட்டின் ஈசான்ய மூலையில் உயரமான மரங்கள் இருக்கக் கூடாது. ஈசான்யத்தில் கிணறுகள் இருக்கலாம். பூஜை அறை ஈசான்ய திசையில் அமைக்கலாம். வீட்டை சுத்தப்படுத்தும் தண்ணீர் ஈசான்ய மூலை வழியாக வெளியேறினால் செல்வ வளம் மற்றும் வாரிசு வளர்ச்சி உண்டாகும்.

    Next Story
    ×