search icon
என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஜெய ஏகாதசி விரதம்... இதை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்...
    X

    ஜெய ஏகாதசி விரதம்... இதை செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்...

    • ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், தனிச்சிறப்பும் உண்டு.
    • விரதங்களில் சிறந்தது ஏகாதசி விரதம்.

    விரதங்களில் ஏகாதசிக்கு இணையான விரதம் எதுவும் இல்லை என பத்ம புராணம், கருட புராணம் உள்ளிட்ட புராணங்கள் சொல்கின்றன. ஏகாதசி திதியானது வளர்பிறை, தேய்பிறை என மாதத்திற்கு இரண்டு முறை வருகிறது. அமாவாசை மற்றும் பெளர்ணமிக்கு முந்தைய நான்காவது நாளை ஏகாதசி என்கிறோம். வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வருகின்றன. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒரு பெயரும், தனிச்சிறப்பும் உண்டு. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன்களை தரக்கூடியன.

    மாசி மாதம் வழிபாட்டிற்குரிய மாதம் என்பதால் இந்த மாதத்தில் வரும் அனைத்து திதிகளும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றவை. மாசி மாதத்தில் வரும் ஏகாதசியும் சிறப்பு வாய்ந்தது. மாசி மாதத்தில் வரும் ஏகாதசிகளுக்கு ஜெய ஏகாதசி, விஜய ஏகாதசிகள் என்று பெயர். இதில் வளர்பிறை வருவது ஜெய ஏகாதசி என்றும், தேய்பிறையில் வருவது விஜய ஏகாதசி என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த இரண்டு ஏகாதசிகளிலும் விரதம் இருப்பவர்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இன்று ஜெய ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் கடுமையான விரதத்தை கடைபிடிப்பது பலரின் பழக்கம். ஜெய ஏகாதசி, பூமி ஏகாதசி என்றும், பீஷ்ம ஏகாதசி என்றும் தென்னிந்தியாவில் அழைக்கப்படுகிறது. குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இது பீஷ்ம ஏகாதசி என்ற பெயரிலேயே கொண்டாடப்படுகிறது.

    ஜெய ஏகாதசி விரதம் மிகவும் உயர்வான விரத நாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து, பெருமாளை வழிபட்டால் கொடுமையான பாவங்களில் இருந்தும் விடுபட முடியும். இது சிவனை வழிபடுவதற்கும் ஏற்ற நாளாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவின் பத்தினியான மகாலட்சுமியை வணங்கினால் வீட்டில் செல்வ வளம் பெருகும். ஏகாதசி விரதம் கடைபிடிப்பவர்கள் அன்று இரவு தூங்காமல், விஷ்ணுவின் நாமங்களை பாராயணம் செய்த படி இருக்க வேண்டும்.

    ஏகாதசி விரதமிருந்து பெருமாளை வணங்கினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வாழ்வில் ஏற்றம் பெற்று, சங்கடங்கள் தீர்ந்து இன்புற்று வாழலாம். காயத்ரிக்கு மிஞ்சிய மந்திரமும் இல்லை; ஏகாதசிக்கு மிஞ்சிய விரதமும் இல்லை' என்பது ஆன்றோர் வாக்கு.

    சொல்ல வேண்டிய மந்திரம்

    "ஓம் நமோ பகவதே வாசுதேவாய"

    "ஓம் நமோ நாராயணா"

    இந்த மந்திரங்களை பூஜையின் போதும், மற்ற நேரங்களிலும் பாராயணம் செய்வது மகாவிஷ்ணுவின் ஆசிகளை பெற்றுத் தரும்

    Next Story
    ×