என் மலர்
வழிபாடு
சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கேரளாவில் ஆலப்புழை அருகே நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற பனிரெண்டு நோன்பு திருவிழா கொடியேற்றம் நேற்று காலையில் தலைமைக் காரியதரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி, காரியதரிசிகள் மணிகுட்டன் நம்பூதிரி, ரஞ்சித் பி. நம்பூதிரி மற்றும் பலர் முன்னிலையில் நடந்தது. இதில் பட்டமன இல்லத் பிரம்மஸ்ரீ உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி மற்றும் மங்கலத் இல்லத் பிரம்மஸ்ரீ கோவிந்தன் நம்பூதிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், பிரம்மஸ்ரீ ரமேஷ் இளமன் நம்பூதிரி, வக்கீல் கோபாலகிருஷ்ணன் நாயர், எம்.பி.ராஜீவ், பி.கே. சுவாமிநாதன் உள்பட பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர்கள் மற்றும் பெரியோர்கள் அசோகன் நம்பூதிரி, துர்கதத்த நம்பூதிரி, ஜெயசூர்யா நம்பூதிரி, ஹரிகுட்டன் நம்பூதிரி ஆகியோர் செய்து இருந்தனர்.
அதைத்தொடர்ந்து நாரி பூஜை என்றழைக்கப்படும் பெண்கள் பாத பூஜை நடைபெற்றது. இதில் களரியில் சாதனை படைத்த மீனாட்சியம்மாளின் கால்களை கழுவி தலைமை பூசாரி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி பாத பூஜையை நடத்தினார்.