search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிறுத்தொண்டநல்லூரில் தசரா திருவிழா: முத்துமாலை அம்மன் சப்பர பவனி
    X

    கற்பகபொன் சப்பரத்தில் அம்மன் ஏரல் பஜாரில் பவனி வந்தபோது எடுத்தபடம்

    சிறுத்தொண்டநல்லூரில் தசரா திருவிழா: முத்துமாலை அம்மன் சப்பர பவனி

    • ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவிலில் தாக சாந்தி, சிறப்பு பூஜையும் நடந்தது.
    • வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த அம்மனை வழிபட்டனர்.

    ஏரல் அடுத்து உள்ள சிறுத்தொண்டநல்லூர் முத்துமாலை அம்மன் கோவிலில் தசரா திருவிழா நேற்று நடந்தது. இத்திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு வான வேடிக்கையுடன், நையாண்டி மேளம், கரகாட்டம், பேண்டு வாத்தியம் முன் செல்ல அம்மன் கற்பகபொன் சப்பரத்தில் நகர்வலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த அம்மனை வழிபட்டனர்.

    நகர்வலம் சென்ற அம்மன் நேற்று அதிகாலை ஏரல் நட்டார் அம்மன் கோவில் சென்றடைந்தவுடன், சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து ஏரல் சவுக்கை முத்தாரம்மன் கோவிலில் தாக சாந்தி, சிறப்பு பூஜையும் நடந்தது.

    அங்கிருந்து அம்மன் புறப்பாடாகி, ஏரல் மெயின் பஜார் வழியாக ஏரல் சேனையர் சமுதாய உச்சினிமாகாளி அம்மன் கோவிலை சென்றடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பஜார் வழியாக தனது பேட்டையில் அமர்ந்த அம்மனுக்கு இரவு ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் சார்பாக சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜையும் நடந்தது. இரவு அம்மன் நகர்வலம் புறப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் வந்து அடைந்தது. அங்கு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×