என் மலர்tooltip icon

    வழிபாடு

    சபரிமலையில் வசதிகளை தெரிந்து கொள்ள `சுவாமி சாட்பாட் செயலி அறிமுகம்
    X

    சபரிமலையில் வசதிகளை தெரிந்து கொள்ள `சுவாமி சாட்பாட் செயலி' அறிமுகம்

    • இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.
    • 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசனுக்காக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

    இந்த சீசனில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி திருவிதாங்கூர் தேவஸ்தானம் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    அதன்படி ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப உதவியுடன் 'சுவாமி சாட்பாட்' செயலியை கேரள அரசு உருவாக்கி உள்ளது.


    திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான அடையாள சின்னத்தை முதல்-மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டார்.

    மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் பக்தர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் 'சுவாமி சாட்பாட்' செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஐயப்ப பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

    இந்த செயலி மூலம் சபரிமலை கோவில் நடை திறப்பு, அடைப்பு, சிறப்பு பூஜை விவரம், அருகில் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய முழு விவரங்களையும் பக்தர்கள் அறிந்து கொள்ளலாம்.

    Next Story
    ×