search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா 2 நாட்கள் நடக்கிறது
    X

    ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா 2 நாட்கள் நடக்கிறது

    • 18-ந்தேதி 1008 வலம்புரி சங்காபிஷேகம் நடக்கிறது.
    • 19-ந்தேதி திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலா நடக்கிறது.

    வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 18, 19 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் ரத்தினகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.

    விழாவில் முதல் நாளான 18-ந் தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு ருத்ராபிஷேகம், கால சாந்தி பூஜை நடக்கிறது. 11 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் மற்றும் 1008 வலம்புரி சங்காபிஷேகம், உச்சிக்கால பூஜை, மாலை 3.30-க்கு விநாயகர், வெங்கடேச பெருமாள், முருகர், அம்பாள் ஆகியோருக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது. இதையடுத்து 4.30 மணி அளவில் சனி மகா பிரதோஷ அபிஷேகம், தீபாராதனையும், 6 மணிக்கு ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகமும், சிவராத்திரி முதல் ஜாம பூஜை, தீபாராதனை நடக்கிறது.

    இரவு 7.30-க்கு தங்கத்தேரில் சுவாமி, அம்பாள் பிரகாரவலமும்,8.30 மணிக்கு 108 வலம்புரி சங்கு பூஜை ஹோமமும் நடைபெறுகிறது. 9 மணிக்கு மகா சிவராத்திரி சிறப்பு நிகழ்ச்சிகளும், 9.30 மணிக்கு ஜலகண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் மகா சிவராத்திரி 2-ம் ஜாம பூஜை, தீபாராதனை நடக்கிறது. 11.30 மணியளவில் ருத்ராபிஷேக பூஜை தொடங்குகிறது. நள்ளிரவு 12 மணிக்கு லிங்கோத்பவர் 3-ம் ஜாம பூஜை மற்றும் மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிவராத்திரி 4-ம் ஜாம பூஜையும், 7 மணிக்கு சுவாமி திருக்கல்யாணமும், 9 மணிக்கு சுவாமி திருவீதி உலாவும், தீபாராதனையும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகள் ஜலகண்டேஸ்வரர் கோவில் தர்ம ஸ்தாபனம் சார்பில் நடைபெறுகிறது.

    Next Story
    ×