என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஜேஷ்டாபிஷேகம் தொடக்கம்
Byமாலை மலர்1 July 2023 10:45 AM IST
- சாமிக்கு கவசம் அணிவித்து சிறப்புப்பூஜை செய்து, கவச்சாதிவாசம் நடந்தது.
- சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் 3 நாட்கள் நடக்கும் ஜேஷ்டாபிஷேகம் நேற்று தொடங்கியது. அதையொட்டி நேற்று அதிகாலை சுப்ர பாதத்தில் சாமி எழுந்தருளல், கைங்கர்யங்கள், மகாசாந்தி ஹோமம் நடந்தது.
கோவிலின் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமிக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து சாமிக்கு கவசம் அணிவித்து சிறப்புப்பூஜை செய்து, கவச்சாதிவாசம் நடந்தது. மாலை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
நிகழ்ச்சியில் பெரிய, சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×