search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா
    X

    கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா

    • நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா.
    • கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

    திருவெண்காடு:

    பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாதசாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி நாகநாத சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். இதனால் இந்த கோவில் கேது பகவானின் பரிகார தலமாக விளங்குகிறது.

    கேதுபகவானை வழிபட்டால் நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு, நாக தோஷம் , திருமணத்தடை நீங்கி செல்வ செழிப்புடன் நல்வாழ்வு கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. நேற்று மாலை 3 .41 மணி அளவில் கேது பகவான் துலாம் ராசியிலிருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை யொட்டி கேது பரிகார யாகம் நடந்தது. பின்னர் கேது பகவானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், கங்கை நீர் உள்ளிட்ட 16 வகை பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து யாக குடங்களிலிருந்து புனித நீர் ஊற்றப்பட்டு மகாபிஷேகம் நடந்தது. இதைத் தொடர்ந்து மலர் அலங்காரம் செய்யப்பட்டு சரியாக 3.41 மணியளவில் தீபாரதனை நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கேதுவை வழிபட்டனர்.

    கேது பெயர்ச்சி நாளிலிருந்து 18 நாட்களுக்கு தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.

    Next Story
    ×