search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மகா சிவராத்திரி: குமரியில் உள்ள 12 சிவாலயங்களிலும் இன்று 2-வது நாளாக பக்தர்கள் ஓடி சென்று தரிசனம்
    X

    பக்தர்கள் இன்று காலை திருவிடைமருதூர் மகாதேவர் கோவிலில் தரிசனம் முடித்து செல்வதை படத்தில் காணலாம்.

    மகா சிவராத்திரி: குமரியில் உள்ள 12 சிவாலயங்களிலும் இன்று 2-வது நாளாக பக்தர்கள் ஓடி சென்று தரிசனம்

    • அனைத்து சிவாலயங்களிலும் இன்றிரவு விடிய விடிய பூஜைகள் நடைபெறும்.
    • ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் காவி துண்டு, காவி வேஷ்டி அணிந்திருந்தனர்.

    குமரி மாவட்டத்திலுள்ள 12 சிவாலயங்களிலும் சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டம் நடந்தது.

    முஞ்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து பக்தர்கள் நேற்று சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள். ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் காவி துண்டு, காவி வேஷ்டி அணிந்திருந்தனர். கையில் பனை ஓலை விசிறி விபூதி பொட்டலத்துடன் பக்தர்கள் ஓட தொடங்கினார்கள்.

    திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீல கண்ட சுவாமி கோவில், மேலங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவி தாங்கோடு மகா தேவர் கோவில், திருப்பன்றி கோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கர நாராயணன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் ஓடி சென்று தரிசனம் செய்தனர்.

    நேற்று காலை முதல் பக்தர்கள் ஒவ்வொரு கோயிலாக சென்று தரிசனம் செய்து வருகிறார்கள். கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கோவில்களில் தரிசனம் செய்தனர். நேற்று இரவு விடிய விடிய பக்தர்கள் சிவாலயங்களில் தரிசனம் மேற்கொண்டனர்.

    இன்று 2-வது நாளாக காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் 12 சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர். பெண்களும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இருசக்கர வாகனங்களிலும் வேன்களில் சென்று தரிசனம் செய்தனர்.

    சுமார் 110 கிலோமீட்டர் தூரத்தை நடை பயணமாக சென்றும் ஒடி சென்றும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு வழி நெடுகிலும் உணவு வகைகள் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான பக்தர்கள் இன்று இரவு சிவாலயங்களில் தங்கி கண் விழித்து வழிபாடு செய்வார்கள். அனைத்து சிவாலயங்களிலும் இன்றிரவு விடிய விடிய பூஜைகள் நடைபெறும்.

    சிவராத்திரியையொட்டி இன்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. * * * மகா சிவராத்திரியையொட்டி சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் இன்று காலை திருவிடைமருதூர் மகாதேவர் கோவிலில் தரிசனம் முடித்து செல்வதை படத்தில் காணலாம்.

    Next Story
    ×