என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
அங்காள பரமேஸ்வரி கோவில்களின் தாய் வீடு மேல்மலையனூர்
- தாய் வீடாக மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் விளங்குகிறது.
- மேல்மலையனூர் திருவிழா தொடங்கும் போது, புதுச்சேரி கோவிலிலும் திருவிழா தொடங்கும்.
தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில்களுக்கு எல்லாம் தாய் வீடாக மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் விளங்குகிறது. பிற ஊர்களில் அங்காள பரமேஸ்வரி கோவில் கட்ட விரும்புகிறார்கள். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலுக்கு வந்து மண் எடுத்து எந்த ஊரில் கோவில் கட்டுகிறார்களோ அந்த ஊரில் கோவில் கட்டுவதற்கு முன்பு இந்த மண்ணை போட்டு அதன் பிறகு கட்டிட வேலைகளை தொடங்குவார்கள்.
அதேபோல் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் உள்ள அக்னி தீர்த்தத்தில் இருந்து தீர்த்தங்களையும் எடுத்து செல்வார்கள். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா தொடங்கும் போது, பிற ஊர்களில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் நிர்வாகிகள் மேல் மலையனூர் வந்து அக்னி தீர்த்தத்தில் தீர்த்தம் எடுத்துச்சென்று அன்னையிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, தங்கள் ஊரில் திருவிழாவுக்கு கொடி ஏற்றுவார்கள்.
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவிலில் இருந்து உருவான முக்கியமான கோவில்களில் பாண்டிச்சேரி சின்ன சுப்பராய வீதியில் உள்ள அங்காள பரமஸ்வரி கோவில் முக்கியமானதாகும். மேல்மலையனூர் திருவிழா தொடங்கும் போது, புதுச்சேரி கோவிலிலும் திருவிழா தொடங்கும். இத்திருவிழா தொடர்ந்து 24 நாட்கள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.