என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா நாளை தொடங்குகிறது
நாகர்கோவில் நாகராஜா கோவிலில் தைப்பெருந்திருவிழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவையொட்டி 28-ந்தேதி காலை 7.30 மணிக்கு கொடியேற்றம், கொடியேற்று பூஜை, சிறப்பு அபிஷேக பூஜை, வழிபாடுகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு மங்கள இசை, 6.30 மணிக்கு சிறப்புரை, இரவு 7 மணிக்கு மண்டகப்படி, ஆன்மிக சொற்பொழிவு, 8 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி, 8.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சாமி எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை 7 மணிக்கு புஷ்ப வாகனத்தில் சாமி எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு, மண்டகப்படி, 8.30 மணிக்கு சாமி வாகனத்தில் எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.
7-ம் நாள் விழாவான அடுத்த மாதம்(பிப்ரவரி) 3-ந்தேதி இரவு 9 மணிக்கு இந்திர வாகனத்தில் சாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. 9-ம் நாள் விழாவான 5-ந்தேதி காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் தேர்வடம் தொட்டு இழுத்தல் (தேரோட்டம்) நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.
தேரோட்ட நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து அன்னதானம், இரவு 8 மணிக்கு கச்சேரி, 9.30 மணிக்கு சப்தாவர்ணம் ஆகியவை நடக்கிறது.
விழாவின் இறுதி நாளான 6-ந்தேதி அதிகாலை 4.15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள், மாலை 5 மணிக்கு ஆராட்டு நிகழ்ச்சி, ஆன்மிக சொற்பொழி, 6.15 மணிக்கு கதா காலசேபம், இரவு 7.45 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து கொம்மண்டை அம்மன் சாமி கொம்மண்டை அம்மன் கோவிலுக்கு எழுந்தருளல், 9.30 மணிக்கு ஆராட்டு துறையில் இருந்து சாமி கோவிலுக்கு எழுந்தருளுதல் ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.