search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முள்ளுவிளை மேற்கம்பதி நாராயணசாமி தேவஸ்தான பங்குனி திருவிழா நாளை தொடங்குகிறது
    X

    முள்ளுவிளை மேற்கம்பதி நாராயணசாமி தேவஸ்தான பங்குனி திருவிழா நாளை தொடங்குகிறது

    • 26-ந் தேதி அய்யா முத்து பல்லக்கில் ஊர் உலா வருதல் நடக்கிறது.
    • 31-ந் தேதி திருக்கல்யாண திருஏடு வாசிப்பு நடக்கிறது.

    முள்ளுவிளை மேற்கம்பதி பெருநெல்குடிவிளை நாராயணசாமி தேவஸ்தான பங்குனி திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் எழுந்தருளுகிறார்.

    நாளை மறுநாள் இரவு 8 மணிக்கு அய்யா சப்பர வாகனத்திலும், 26-ந் தேதி மதியம் 3 மணிக்கு அய்யா முத்து பல்லக்கில் ஊர் உலா வருதலும், இரவு 8 மணிக்கு அய்யா முத்து பல்லக்கில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், 27-ந் தேதி இரவு 8 மணிக்கு அய்யா காமதேனு வாகனத்திலும், 28-ந் தேதி அய்யா சர்ப்ப வாகனத்திலும் எழுந்தருளுகிறார்.

    29-ந் தேதி இரவு 7 மணிக்கு சமய வகுப்பு ஆண்டு விழா நிறைவும், பரிசு வழங்குதலும், 8 மணிக்கு அய்யா அன்ன வாகனத்தில் எழுந்தருளலும், 30-ந் தேதி இரவு 8 மணிக்கு அய்யா அனுமன் வாகனத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறும்.

    31-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், 8 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் எழுந்தருளலும், ஏப்ரல் 1-ந் தேதி இரவு 7 மணிக்கு பகவதி அம்மன் திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பும், 8 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் எழுந்தருளலும் நடைபெறும்.

    2-ந் தேதி மாலை 4 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் வடவீதி ஊர்வலம் வருதலும், 3-ந் தேதி காலை 8 மணிக்கு தென் வீதி சந்தன குட ஊர்வலமும், நண்பகல் 12½ மணிக்கு தேரோட்டமும் நடைபெறும்.

    பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி சிங்காரி மேளமும் பரிசு வழங்குதலும், மாலை 6 மணிக்கு திருக்கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் மதியம் 1 மணிக்கு அன்ன தர்மம் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×