என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
- திருவிழா நாளை தொடங்கி 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
- நாளை மாலை 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது.
கோட்டார் மறை மாவட்டம் வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் 2-வது வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 21-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
இதையொட்டி நாளை காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி நடைபெறுகிறது. கொடியேற்று விழாவுக்கு அருட்பணியாளர் டைனீஷியஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் ஆன்சன் மறையுரையாற்றுகிறார். உத்திரபிரதேசம் மாநிலம் பரேலி மறை மாவட்டத்தை சேர்ந்த ஆயர் இக்னேஷியஸ் டிசூசா திருவிழா கொடியை ஏற்றிவைக்கிறார்.
விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர், மறைக்கல்வி ஆண்டுவிழா, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.
விழாவின் 9-ம் நாளான 20-ந்தேதி மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் மைக்கேல் ஏஞ்சல் தலைமை தாங்கி சிறப்பு மாலை ஆராதனை நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் ரூபஸ் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு அருட்பணியாளர் அலாய்சியஸ் தலைமை தாங்கி திருவிழா கூட்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் கிளாசின் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு திருப்பலி, கொடியிறக்கம், இரவு 7 மணிக்கு சகாய அன்னை இளைஞர்கள் இயக்கம் நடத்தும் சிறப்பு கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை ஜோசப்ரொபிரல்ட், இணை பங்குதந்தை ஜெனிஷ் கவின், பங்கு பேரவை துணைத்தலைவர் தங்கப்பன், செயலாளர் கவிதா, துணைச் செயலாளர் கமலா ஜோதி, பொருளாளர் மேரி ஜெயபாக்கியம் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.