என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி](https://media.maalaimalar.com/h-upload/2025/02/11/9190910-newproject33.webp)
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் நெல் கோட்டை வழங்கும் நிகழ்ச்சி
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg)
- நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- நெற்கதிர்கள் அரிசியாக்கப்பட்டு வேதாரண்யேஸ்வரருக்கு நிவேத்தியம் செய்யப்படும்.
வேதாரண்யம்:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்துள்ள குன்னலூர் கிராமத்தில் சுமார் 200 ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
அங்கிருந்து வரும் நெல்லை கொண்டு தினமும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரருக்கு நிவேத்தியம் செய்யப்படுகிறது. இங்கு விளைந்த அறுவடை செய்து முதல் நெல்லை தைப்பூசத்தன்று அங்கிருந்து நெல் கோட்டையாக கட்டி சுவாமிக்கு அளிக்கும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு தைப்பூச தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கோட்டையாக கட்டி நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
முன்னதாக களஞ்சியம் விநாயகர் கோவிலின் முன்வைத்து சிவகுமார் குருக்கள் சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர், மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வேதாரண்யம் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டது.
தொடர்ந்து, வேதாரண்யேஸ்வரர் சன்னதியின் முன்பு வைக்கப்பட்டு, நெல் கோட்டைக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு பிரசாதமாக நெற்கதிர்கள் வழங்கப்பட்டது.
பின்னர், அந்த நெற்கதிர்கள் அரைத்து அரிசியாக்கப்பட்டு இன்று வேதாரண்யேஸ்வரருக்கு நடக்கும் 2-ம் கால பூஜையில் நிவேத்தியம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
நெல் கோட்டை ஊர்வலத்தின் போது வேதாரண்யம் கோவில் நிர்வாகத்தினர், யாழ்பாணம் வரணி ஆதீனம், செவ்வந்தி நாத பண்டாரசந்நிதி, இளையவர் சபேசன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.