search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வட மாநிலங்களில் சத் பூஜை கொண்டாட்டம் தொடக்கம்
    X

    வட மாநிலங்களில் சத் பூஜை கொண்டாட்டம் தொடக்கம்

    • இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.
    • டெல்லியில் வருகிற 7-ந்தேதி பொது விடுமுறை.

    புதுடெல்லி:

    சத் பூஜை என்பது உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முக்கியமாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும்.

    இது சூரிய கடவுளின் வழிபாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. உண்ணா நோன்பு, சூரியனுக்கு பிரார்த்தனை செய்தல், புனித நீராடல் மற்றும் தண்ணீரில் நின்று தியானம் செய்தல் உள்ளிட்ட 4 நாள் சடங்குகளை உள்ளடக்கியது.

    இந்த ஆண்டுக்கான சத் பூஜை இன்று தொடங்கி வருகிற 8-ந்தேதி வரை 4 நாட்கள் நடைபெறுகிறது.


    இன்று பக்தர்கள் நதிக்கரை, கடல் அல்லது நீர் நிலைகளில் நீராடி உணவை எடுத்துக்கொள்கிறார்கள். 2-வது நாள் உண்ணா நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.

    3-வது நாளில் சூரிய உதயத்திற்கு முன்பே நீர் நிலைகளில் திரளும் பக்தர்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு பக்தி பாடல்களை பாடி பிரார்த்தனை செய்வார்கள். இதையொட்டி டெல்லியில் வருகிற 7-ந்தேதி பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

    Next Story
    ×