search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிக்கல் சிங்காரவேலவர் பற்றிய 10 அரிய தகவல்கள்...
    X

    சிக்கல் சிங்காரவேலவர் பற்றிய 10 அரிய தகவல்கள்...

    • முருகனின் வாகனம் மயில்.
    • மயிலுக்கு சிகி என்றொரு பெயரும் உண்டு.

    * முருகனின் வாகனம் மயில். மயிலுக்கு சிகி என்றொரு பெயரும் உண்டு. சிகி வாகனன் என்பதில் இருந்து இத்தலம் சிக்கல் என்றானது.

    * இத்தல சிங்கார வேலவனின் ஆபரணங்களும், அவன் பெயரை போலவே சிங்காரமானவைதான்.

    * ரத்தினங்கள் இழைத்த கொண்டை, பொன்னால் ஆன கவசம், வெள்ளியிலான குடை, வைரவேல், ஆனவட்டம் என அற்புத வேலைபாடுகள் அமைந்த ஆபரணங்கள் இந்த வேலவனுக்கு உண்டு.

    * தட்சிணாமூர்த்தி கோஷ்டத்திற்கு அருகே தல விருட்சமான மல்லிகைக் கொடி உள்ளது.

    * இத்தல கார்த்திகை மண்டபத்தில் கந்த புராண நிகழ்ச்சிகளை ஓவியங்களாகவும், ராமாயண நிகழ்ச்சிகளை சுதைச் சிற்பங்களாகவும் தரிசிக்கலாம்.

    * ஆணவமும், மந்த புத்தியும் உள்ளது ஆடு. நம்மிடம் உள்ள ஆணவத்தையும், மந்த புத்தியையும் அடக்குவேன் என்பதை கூறாமல் கூறுவது போல இத்தல முருகன் ஆட்டு கிடா வாகனத்தில் பவனி வருகிறார்.

    * இத்தலத்தில் விருத்த காவிரி எனும் ஓடம்போக்கியாறு, காமதேனு தீர்த்தம், கயா தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், அம்மா தீர்த்தம் என 5 தலதீர்த்தங்கள் உள்ளன.

    * திலோத்தமையின் மீது காதல் கொண்டு அதனால் தவபலனை இழந்த விஸ்வாமித்திரர் இத்தலத்திற்கு வந்து அந்த பாவத்தை தீர்த்துக் கொண்டதாக தல புராணம் கூறுகிறது.

    * வசிஷ்டர் சீடர்களோடு இருப்பதும், காமதேனு நவநீதேஸ்வரரை வழிபடுவதும் ஆகிய தலபுராணச் சிற்பங்களை பிராகாரத்தில் காணலாம்.

    * வசந்த மண்டபத்தில் கார்த்திகை திருநாள் உற்சவத்தின் போது தேவியருடன் சிங்கார வேலவன் எழுந்தருள்வது வழக்கம். அப்போது நிலைக்கண்ணாடி முன் நடத்தப்படும் ஒய்யாளி சேவை அற்புதமானது.

    Next Story
    ×