search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கிருத்திகை வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்
    X

    மலர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சிங்கார வேலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் கிருத்திகை வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்

    • சிங்கார வேலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புகழ்பெற்ற முருகன் கோவில்களில் ஒன்றாக நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆனி மாத கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் சிங்கார வேலவருக்கு, பால், தயிர், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், பன்னீர் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு மலர் அலங்காரத்தில் சிங்காரவேலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆறுமுக கடவுளுக்கும், வெளிபிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சாமிக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து விபூதி அலங்காரத்துடன் வண்ணமலர்களால் சாமி அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இங்குள்ள சுப்பிரமணியசாமி ஒரு முகம், ஆறு திருக்கரங்களை கொண்ட குழந்தை முகத்துடன் அமைந்துள்ளது.

    இதேபோல், தோப்புத்துறை கைலாசநாதர்கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவிலில் அமைந்துள்ள முருகனுக்கும், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் வாய்மேடு பழனி ஆண்டவர் கோவிலில் ஆனி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. முன்னதாக முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம், நெய், தேன், திருநீறு, மஞ்சள் பொடி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வெள்ளியங்கி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×