என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது](https://media.maalaimalar.com/h-upload/2023/01/11/1820096-eral-chairman-arunachala-swamy-temple.webp)
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் தை அமாவாசை திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தை அமாவாசை திருவிழா 21-ந் தேதி நடக்கிறது.
- 23-ந்தேதி இரவு சாமி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடக்கிறது.
ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் தை அமாவாசை திருவிழா நாளை (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் சுவாமி இரவு வெவ்வேறு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் சப்பரத்தில் எழுந்தருளல் காட்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியான தை அமாவாசை திருவிழா 21-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்று பகல் 1 மணிக்கு சாமி உருகு பலகை தரிசனம், அபிஷேகம், மாலை 5 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் சேர்மத்திருக்கோல காட்சி, இரவு 10 மணிக்கு கற்பகபொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனம் நடக்கிறது.
22-ந் தேதி காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனம், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு பச்சை சாத்தி தரிசனம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து பச்சை சாத்தி சப்பரம் உலா வருதல், இரவு 10 மணிக்கு கோவில் மூலஸ்தானம் வந்து சேரும் ஆனந்த காட்சி நடைபெறுகிறது.
23-ந்தேதி காலை தாமிரபரணி நதியில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் சாமி நீராடலும், மதியம் 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, இரவு சாமி ஆலிலை சயன மங்கள தரிசனம் நடைபெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.