என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி 18-ந்தேதி தொடங்குகிறது
- வராகி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.
- இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.
தஞ்சை பெரியகோவிலில் வராகிஅம்மன் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வராகி அம்மனுக்கு 11 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டிற்கான ஆஷாட நவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து வராகிஅம்மனுக்கு பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறுகிறது.
வராகி அம்மனுக்கு 18-ந்தேதி மாலையில் இனிப்பு அலங்காரமும், 19-ந் தேதி மஞ்சள் அலங்காரமும், 20 -ந் தேதி குங்குமம் அலங்காரமும், 21--ந் தேதி சந்தன அலங்காரமும், 22-ந் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 23-ந் தேதி மாதுளை அலங்காரமும், 24-ந் தேதி நவதானிய அலங்காரமும், 25-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும், 26-ந்தேதி கனி அலங்காரமும், 27-ந்தேதி காய்கறி அலங்காரமும் 28-ந் தேதி புஷ்ப அலங்காரமும் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து இரவு கோவில் வளாகத்திற்குள் சாமி புறப்பாடும் நடைபெறுகிறது.