என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தீர்த்தவாரி: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
- அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற கோவில் ஆகும்.
- அபிராமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்த கடேஸ்வரர் கோவில் உள்ளது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி தீர்த்தவாரி ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர தீர்த்தவாரி கோவிலில் உள்ள திருக்குளத்தில் நேற்று நடந்தது.
இதையொட்டி விநாயகர், சண்டிகேஸ்வரி, சோமாஸ்கந்தர் அபிராமி ஆகியோர் கோவில் குளக்கரையில் எழுந்தருளினர். அப்போது அஸ்திரதேவருக்கு பால், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பல்வேறு வாசனை திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. பின்னர் அபிராமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து அர்ச்சனை நடைபெற்றது. முன்னதாக தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு, ஆராதனையும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.