search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்
    X

    திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்ப உற்சவம் நடந்த காட்சி.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் தொடக்கம்

    • இந்த தெப்போற்சவம் 5 நாட்கள் நடக்கிறது.
    • நாதநீராஞ்ச மண்டபத்தில் வேத பண்டிதர்கள் வேத பாராயணம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 5 நாட்கள் நடைபெறும். வருடாந்திர தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    முதல் நாளான நேற்றிரவு சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் சமேத கோதண்டராமருடன் ஏழுமலையான் அலங்கரிக்கப்பட்ட தெப்பலில் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    தெப்பல் உற்சவத்தில் சாமி வலம் வருவதை காண தெப்பக்குளத்தை சுற்றி தரிசனத்துக்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்து கோவிந்தா கோவிந்தா என்று பக்தி முழக்கமிட்டபடி வணங்கினர்.

    இன்று இரவு 2-வது நாள் கிருஷ்ணர், ராதா ருக்மணியுடனும், நாளை 3-வது நாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஏழுமலையான் தெப்பல் உற்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    6-ந் தேதி 4-வது நாள் 5 சுற்றுக்களும், 7-ந் தேதி 5-வது நாள் 7 சுற்றுக்களும் ஏழுமலையான் உற்சவம் நடக்கிறது.

    Next Story
    ×