search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு
    X

    தேரோட்டம் நடந்ததையும், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்ததையும் படத்தில் காணலாம்.(உள்படம்: சவுரிராஜபெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேரில் எழுந்தருளினார்).

    திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு

    • 6-ந்தேதி வெள்ளி ரத புறப்பாடு நடக்கிறது.
    • 7-ந்தேதி விடையாற்றி நடைபெறுகிறது.

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வைணவ தலங்களில் திவ்ய தேசம் என்று அழைக்கப்படும் 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதி உலா, தங்க கருட சேவை, வெள்ளை சாத்தி புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சவுரிராஜபெருமாள், பத்மினி தாயார் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. அதனை தொடர்ந்து பெருமாள் உபநாச்சியார்கள் நால்வருடன் தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவையொட்டி வருகிற 6-ந்தேதி வெள்ளி ரத புறப்பாடும், 7-ந்தேதி விடையாற்றியும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன், கணக்கர் உமா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×