என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் 2-ந்தேதி கருட சேவை
- இந்த விழா வருகிற மார்ச் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- தேரோட்டம் 5-ந் தேதி நடக்கிறது.
திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்த விழா வருகிற மார்ச் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி நேற்று முதல் நாள் இரவு அங்குரார்ப்பணம் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை கொடியேற்று விழா நடைபெற்றது.இதில் தக்கார் முருகன், செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் தினமும் தங்கப்பல்லக்கில் திருமேனி சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தங்க கருடசேவை 2-ந்தேதியும், தேரோட்டம் 5-ந் தேதியும், திருமலைராஜன் பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சி 7-ந்தேதியும், திருக்கண்ணபுரம் நித்திய புஷ்கரணி திருக்குளத்தில் தெப்பத் திருவிழா 12-ந்தேதியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.