search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 26-ந்தேதி நவராத்திரி விழா
    X

    திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 26-ந்தேதி நவராத்திரி விழா

    • நவரத்திரி விழா 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • 9 நாட்களும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும்.

    திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் நவராத்திரி உற்சவ விழா வெகு விமரிசையாக நடத்துவது வழக்கம்.

    இந்த ஆண்டும், நவரத்திரி விழா வரும் 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், செப்டம்பர் 30-ம்தேதி லட்சுமி பூஜை, அக்டோபர் 5-ந்தேதி அஷ்டோத்ர சத கலசாபிஷேகம் போன்றவை முக்கிய நிகழ்வுகளாகும்.

    9 நாட்களும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படும். திரளான பக்தர்கள் இதில் கலந்துக்கொள்வார்கள் அனைத்து சேவைகளையும், ஆர்ஜித சிறப்பு தரிசனங்களையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

    நவராத்திரி நெருங்குவதையொட்டி பத்மாவதி தாயாருக்கு ஹைதராபாத்தை சேர்ந்த சத்யநாராயணா தம்பதியினர் 85 கிராம் எடையில் ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்க பாதங்களை நேற்று காணிக்கையாக வழங்கினர்.

    Next Story
    ×