என் மலர்
வழிபாடு
X
திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் டிசம்பர் மாதம் நடக்கும் முக்கிய உற்சவங்கள்
Byமாலை மலர்1 Dec 2022 1:56 PM IST
- 8-ந்தேதி கபிலத்தீர்த்த முக்கொடி உற்சவம்.
- 16-ந்தேதி மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் தொடக்கம்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட உள்ளூர் கோவில்களில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்கும் விழாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் 6-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடக்கிறது. 8-ந்தேதி கபிலத்தீர்த்த முக்கொடி உற்சவம்.
11-ந்தேதி திருப்பதி கோவிந்தராஜசாமி திருவடியை சன்னதிக்குக் கொண்டு வருகிறார்கள். 16-ந்தேதி மாலை 6.12 மணிக்கு மார்கழி மாதம் தொடக்கம். 17-ந்தேதியில் இருந்து திருப்பதியில் உள்ள உள்ளூர் வைணவ கோவில்களில் சுப்ர பாதத்துக்கு பதிலாக திருப்பாவை பாராயணம் செய்யப்படுகிறது.
மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X