search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கடன் தொல்லை தீர... இந்த கிழமையில் வாராஹியை வழிபடுங்கள்....
    X

    கடன் தொல்லை தீர... இந்த கிழமையில் வாராஹியை வழிபடுங்கள்....

    • சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    • இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.

    சைவம், பிராமணியம், வைணவம், சக்தி வழிபாடு ஆகிய நான்கு வழிபாட்டு முறைகளை பின்பற்றுபவர்களும் வழிபடும் தெய்வமாக விளங்கக் கூடியவள் வாராஹி. வாழ்க்கையில் அனைத்தும் முடிந்து விட்டது, கடனாக கொடுத்த பணம் இனி திரும்ப வரவே வராது என்ற நிலையில் இருந்தால் கூட வாராஹியை வழிபட்டால் அந்த நிலைமை மாறும் என்பது பலரும் சொல்லும் அனுபவ உண்மை.

    மகா வாராஹி அம்மனுக்கு பலவிதமான ரூபங்கள் உள்ளன. மேலும், சப்த கன்னிமார்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


    பொதுவாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பெரும்பாலானவர்கள் அம்மன் வழிபாடு செய்வார்கள். ஆனால், ஸ்ரீ வாராஹி அம்மன் வழிபாடு என்று வரும்போது, அமாவாசை, பஞ்சமி ஆகிய திதிகள் விசேஷம். எதிரிகள், செய்வினை, கண் திருஷ்டி, முடக்கம் ஆகியவற்றை நீக்கும், காக்கும் அம்மனாக வாராஹி அம்மன் வழிபாடு செய்யப்படுகிறது. மகா விஷ்ணுவின் அவதாரமாக கருதப்படும் ஸ்ரீ வாராஹி அம்மனை புதன் கிழமைகளில் வழிபாட்டு விளக்கேற்றி வந்தால் கடன் தொல்லை நீங்கும்.

    சப்த கன்னியர்களில் ஒருவராக போற்றப்படும் வாராஹி அம்மன், தெய்வீக குணமும், விலங்கின் ஆற்றலும் கொண்டவளாக விளங்குகிறாள். தாயை போன்ற இரக்கமும், தயாள குணம் உடையவளாக இருக்கும் வாராஹி, மூர்க்க குணம் உடையவளாக உள்ளதால் இவளை உக்ர தெய்வமாக வழிபடுகிறார்கள். இவளை வராக அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவின் பெண் வடிவம் என்றும் சிலர் சொல்வதுண்டு.


    சப்த கன்னியர்களான பிரம்மி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கெளமாரி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் பன்றியின் முகமும், பெண்ணின் உடலும் கொண்டவள் வாராஹி. எதிரிகள், தீயசக்திகள், கடன்கள் போன்ற துயரங்கள் ஆகியவற்றை அடித்து விரட்டக் கூடிய தெய்வமாக வாராஹி விளங்குகிறாள். வாராஹி வழிபாட்டினை பலரும் மேற்கொண்டாலும் இந்தியாவில் காசி மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவிலில் மட்டுமே வாராஹிக்கு தனி சன்னதி உள்ளது.

    புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தொடர்ந்து வழிபாட்டு வருபவர்களுக்கு கடன் தொல்லை தீரும். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் செலவாகிக் கொண்டே இருக்கிறது, வரவுக்கு மீறி செலவு, கடனை முழுமையாக தீர்க்க முடியாத சூழல், கடனால் ஏற்பட்ட நெருக்கடிகள், தீராத கடன் சுமை போன்ற எல்லா விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக புதன் கிழமை அன்று வாராஹி அம்மனை தரிசித்து வரலாம்.

    Next Story
    ×