என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம் ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/21/1884874-22nd-events.webp)
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம்.
இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். சிவகாசி விசுவநாதர் பூதவாகனத்தில் திருவீதி உலா, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் விடையாற்று உற்சவம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, வைகாசி-8 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திருதியை இரவு 11.41 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 11.20 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-முயற்சி
ரிஷபம்-புகழ்
மிதுனம்-அனுபவம்
கடகம்-இன்பம்
சிம்மம்-சுகம்
கன்னி-வெற்றி
துலாம்- ஆக்கம்
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- உறுதி
மகரம்-சாந்தம்
கும்பம்-அன்பு
மீனம்-பாசம்
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional