என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் 17-ந்தேதி பூச்சொரிதல் விழா
- இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது.
- சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
திருச்சி உறையூரில் பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெக்காளியம்மன் அருள்பாலித்து வருகிறார்.
மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் நடைபெற உள்ளது.
முதலில் கோவில் நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பூத்தட்டுகளை ஏந்தி கோவிலை வலம் வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றுவார்கள். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.