என் மலர்
வழிபாடு

திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
தஞ்சை சித்தி விநாயகர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தர்கள் தரிசனம்
- கல்யாண வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது.
- பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தஞ்சை - நாகை சாலை ஜோதி நகரில் சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாணவரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், லெட்சுமி, தெட்சணாமூர்த்தி, பிரம்மா, வள்ளி தேவசேனா கல்யாணசுப்பிரமணியர், விஷ்ணு துர்க்கை, லெட்சுமிகுபேரர், கால பைரவர், நவக்கிரகங்களும் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலில் நேற்று திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கல்யாண வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடந்தது. இந்த திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியில் திருமணம் ஆகாதவர்கள் கலந்து கொண்டால் ஒரு ஆண்டில் திருமணம் ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதையொட்டி காலை 9 மணிக்கு பெருமாளுக்கு
நல்ல எண்ணெய், திரவியப்பொடி, மஞ்சள் பொடி, அரிசிமாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதனை அடுத்து ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. பின்னர் அர்ச்சகர் சதீஷ், சாமிக்கு மகாதீபாராதனை காண்பித்தார். இதில் கோவில் நிர்வாக குழு தலைவர் செந்தில் குமார் கலந்து கொண்டார்.
முன்னதாக திருக்கல்யாண வைபவத்தையொட்டி 50-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் மருதம் நகரில் உள்ள சிவன் கோவிலில் இருந்து சீர் வரிசை பொருட்களை எடுத்துக்கொண்டு ஹரிநகர், ரம்யா நகர், ராதாகிருஷ்ணன் நகர், ஜோதி நகர் வழியாக சித்தி விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
இதில் செயலாளர் மணவாளன், பொருளாளர் விஜயகுமார் வாட்டர் செந்தில்குமார், ராஜப்பா, செல்லதுரை, முக்கியஸ்தர்கள் வைத்திலிங்கம், ஆறுமுகம், ராஜசேகர் உலகநாதன், இளங்கோவன்உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை ஜானகிராமன், பாஸ்கர்ராஜ், தமிழ் தாசன், கந்தசாமி, வீரபாஸ்கர், சந்தோஷ், அசோக் குமார், மகேஷ் ஆகியோர் செய்தனர். முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.






