search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    வாரம் ஒரு திருமந்திரம்: இந்தவார திருவாசகம் உங்களுக்காக...!
    X

    வாரம் ஒரு திருமந்திரம்: இந்தவார திருவாசகம் உங்களுக்காக...!

    • பன்னிரு திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம்.
    • தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் என்பதால் இது தேவாரம்.

    சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளை 'தேவாரம்' என்று அழைக்கிறோம். இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

    தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது தேவாரம்' என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். இந்த தேவாரப்பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத் தையும் பார்க்கலாம்.

    பாடல்

    தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்

    காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்

    ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த

    பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

    விளக்கம்

    திருஞானசம்பந்தர் ஒரு காதினில் தோட்டினையும், மற்றொரு காதினில் குழை ஆபரணத்தையும் அணிந்த பெருமான், காளையை தனது வாகனமாகக் கொண்டும், தன்னிடம் சரணடைந்த பிறை சந்திரனை தனது சடையில் ஏற்ற வண்ணமும், சுடுகாட்டு சாம்பலை, தனது உடல் முழுவதும் பூசியபடி இருக்கிறார். அவர் எனது உள்ளத்தை கொள்ளை கொண்ட கள்வனாக விளங்குகிறார்.

    அடுக்கடுக்கான இதழ்களைக் கொண்ட தாமரை மலரின் மீது அமர்ந்திருக்கும் பிரம்மன், முன்பொரு நாளில் தன்னை பூஜித்து வணங்கியதன் காரணமாக, அவருக்கு படைப்புத் தொழிலை சரியாகச் செய்யும் வகையில் அருள்புரிந்தவர், சிவ தொறு பெருமான். இவரே பெருமை உடையதும், பிரமாபுரம் என்று அழைக் கப்படுவதுமான சீர்காழி நகரினில் உறைந்து அருள் செய்யும் எனது மதிப்புக்குரிய தலைவன் ஆவார்.

    Next Story
    ×