search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    யூரோ கோப்பை கால்பந்து: குரூப் டி-ல் முதலிடத்தை பிடித்து அசத்திய ஆஸ்திரியா
    X

    யூரோ கோப்பை கால்பந்து: குரூப் டி-ல் முதலிடத்தை பிடித்து அசத்திய ஆஸ்திரியா

    • குரூப் டி-ல் ஆஸ்திரியா அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
    • குரூப் டி-ல் பிரான்ஸ் அணி 2-வது இடத்தையும், போலந்து அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

    24 அணிகள் இடையிலான 17-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி ஜெர்மனியில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று இரவு நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் - போலந்து அணிகள் மோதின. பரபரப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

    இதன் மூலம் குரூப் டி-ல் பிரான்ஸ் அணி 2-வது இடத்தையும், போலந்து அணி 4-வது இடத்தையும் பிடித்தன.

    மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்து - ஆஸ்திரியா அணிகள் மோதியது. 6-வது நிமிடத்தில் ஆஸ்திரியா தனது முதல் கோலை அடித்தது. அதனை தொடர்ந்து நெதர்லாந்து 47-வது நிமிடத்தில் தனது முதல் கோலை அடித்து அசத்தியது. அதனை தொடர்ந்து 59-வது நிமிடத்தில் ஆஸ்திரியாவும் 75-வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியிம் கோல் அடித்தனர். இதனால் ஆட்டம் பரபரப்பானது.

    அடுத்த சிறிது நேரத்தில் (80-வது நிமிடம்) ஆஸ்திரியா ஒரு கோல் போட்டு அசத்தியது. இறுதி வரை நெதர்லாந்து அணியால் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை. இதனால் 2-3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா வெற்றி பெற்றது. மேலும் குரூப் டி-ல் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

    Next Story
    ×