search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    யூரோ 2024: குரோசியாவுக்கு எதிராக ஓன் கோலால் வெற்றியை தவறவிட்ட அல்பேனியா
    X

    யூரோ 2024: குரோசியாவுக்கு எதிராக ஓன் கோலால் வெற்றியை தவறவிட்ட அல்பேனியா

    • முதல் பாதி நேரத்தில் அல்பேனியா 1-0 என முன்னிலை பெற்றிருந்தது.
    • ஓன் கோல் கிடைத்ததால் குரோசியா 2 கோல் அடித்தது.

    யூரோ 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு நடைபெற்ற போட்டியில் "பி" குரூப்பில் இடம் பிடித்துள்ள குரோசியா- அல்பேனியா அணிகள் மோதின.

    ஆட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்தில் அல்பேனியா முதல் கோலை பதிவு செய்தது. அந்த அணியின் குவாசிம் லாசி இந்த கோலை அடித்தார். அதன்பின் இரண்டு அணி வீரர்களால் முதல் பாதி நேர ஆட்டத்தில் மேற்கொண்டு கோல் அடிக்க முடியவில்லை. இதனால் அல்பேனியா 1-0 என முன்னிலைப் பெற்றிருந்து.

    2-வது பாதி நேர ஆட்டத்தில் குரோசியா வீரர்கள் கோல் அடிக்க முயற்சி செய்தனர். நீண்ட நேர முயற்சிக்குப்பின் 74-வது நிமிடத்தில் வாய்ப்பு கிடைத்தது. அன்ட்ரெஜ் கிராமாரிக் கோல் அடித்தார். அடுத்த 2-வது நிமிடத்தில் குரோசியாவுக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது.

    அல்பேனியா கோல் கம்பம் அருகே குரோசிய வீரர் கோல் அடிக்க முயற்சி செய்து பந்தை உதைத்தார். அதை அல்பேனிய வீரர்கள் தடுக்க முயன்றனர். அப்போது கிளாஸ் ஜாசுலாவின் காலில் பந்து பட்டு கோலாக மாறியது. இதனால் குரோசியாவிற்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. இதனால் குரோசியா 2-0 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் அல்பேனியா வீரர்களை கோல் அடிக்க விடாத வகையில் கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 90 நிமிடம் வரை அல்பேனியா வீரர்களால் கோல் அடிக்கமுடியவில்லை. காயத்திற்கான நேரம் என 6 நிமிடம் கூடுதலாக வழங்கப்பட்டது.

    அதில் 95-வது நிமிடத்தில் ஓன் கோல் கொடுத்த கிளாஸ் ஜாசுலா சிறப்பான முறையில் கோல் அடித்தார். சக வீரர் கோல் கம்பம் அருகே பந்தை கடத்தி இவருக்கு பாஸ் செய்ய குரோசிய வீரர் அதை தடுக்க முயன்றார். ஆனால் பந்து அவரை கடந்து ஜாசுலாவிடம் வந்தது. அவர் எளிதாக அதை கோலாக மாற்றினார். இதனால் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.

    ஓன் கோல் கொடுக்கவில்லை என்றால் அல்பேனியா வெற்றி பெற்றிருக்கும். இறுதியில் போட்டியில் டிராவில் முடிந்ததால் அல்பேனியா ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.

    Next Story
    ×