search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    யூரோ கோப்பை: 1-0 என ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஹங்கேரி
    X

    யூரோ கோப்பை: 1-0 என ஸ்காட்லாந்தை வீழ்த்தியது ஹங்கேரி

    • லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
    • இரு போட்டிகளில் ஹங்கேரி தோல்வியை தழுவி இருந்தது.

    ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 24 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும்.

    லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பிடிக்கும் நான்கு அணிகள் என மொத்தம் 16 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதன்படி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் ஹங்கேரி அணிகள் இடையிலான போட்டி நேற்று நள்ளிரவு நடைபெற்றது.

    நடப்பு யூரோ கோப்பையின் முதல் இரு போட்டிகளில் தோல்வியை தழுவிய ஹங்கேரி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே நாக் அவுட் சுற்று வாய்ப்பை எதிர்பார்க்க முடியும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது. ஸ்காட்லாந்து அணியும் இதேபோன்ற சூழலில் போட்டியில் களமிறங்கியது.

    அந்த வகையில், இரு அணிகளும் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின. எனினும், போட்டி முடிய பத்து நிமிடங்கள் இருந்த சமயத்தில் ஹங்கேரி வீரர் கெவின் சோபோத் கோல் அடிக்க அந்த அணி முன்னேற்றம் கண்டது.

    போட்டி முடிவில் ஸ்காட்லாந்து அணியின் கோல் அடிக்கும் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதன் காரணமாக ஹங்கேரி அணி 1-0 என்ற வகையில் வெற்றி பெற்றது.

    Next Story
    ×