search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    யூரோ 2024: இன்ஜூரி நேரத்தில் கோல் அடித்து ஸ்லோவேனியாவிற்கு எதிராக டிரா செய்த செர்பியா
    X

    யூரோ 2024: இன்ஜூரி நேரத்தில் கோல் அடித்து ஸ்லோவேனியாவிற்கு எதிராக டிரா செய்த செர்பியா

    • முதல் பாதி நேர ஆட்டத்தில் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
    • கடைசி நிமிடத்தில் கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி செர்பியா கோல் அடித்தது.

    யூரோ 2024 கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு நடைபெற்ற போட்டியில் குரூப் "சி"-யில் இடம் பிடித்துள்ள ஸ்லோவேனியா- செர்பியா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் முதல் பாதியில் இரண்டு அணி வீரர்களாகும் கோல் அடிக்க முடியவில்லை. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதிர்ஷ்டம் கைக்கொடுக்கவில்லை.

    இறுதியாக ஸ்லோவேனியா 69-வது நிமிடத்தில் கோல் அடித்தது. கோல் கம்பத்திற்கு இடது புறத்தில் இருந்து பாஸ் செய்த பந்தை ஜான் கார்னிக்னிக் கோலாக்கினார். இதனால் ஸ்லோவேனியா 1-0 என முன்னிலை பெற்றது.

    அதன்பின் 90 நிமிடம் வரை செர்பியா அணியால் பதில் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டம் நிறுத்தம் மற்றும் இன்ஜூரிக்கான நேரமாக கூடுதலாக 6 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

    95-வது நிமிடத்தில் செர்பியாவுக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. கார்னரில் இருந்து அடிக்கப்பட்ட பந்தை லூகா ஜோவிக் தலையால் முட்டி கோலாக்கினார். இதனால் போட்டி 1-1 என டிராவில் முடிந்தது.

    ஸ்லோவேனியா அணிக்கு 4 கார்னர் வாய்ப்பும், செர்பியா அணிக்கு 9 கார்னர் வாய்ப்பும் கிடைத்தது. இரு அணிகளும் கோல் கம்பத்தை நோக்கி தலா 4 முறை டார்கெட் செய்தனர். செர்பியா வீரர்கள் 586 பாஸ் செய்த நிலையில், ஸ்லோவேனியா வீரர்கள் 347 பாஸ் செய்தனர்.

    Next Story
    ×