search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து: ஸ்லோவாக்கியாவை வீழ்த்தி கம்பேக் கொடுத்த உக்ரைன்
    X

    யூரோ சாம்பியன்ஷிப் கால்பந்து: ஸ்லோவாக்கியாவை வீழ்த்தி கம்பேக் கொடுத்த உக்ரைன்

    • யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • குரூப் E பிரிவில் ஸ்லோவக்கியா, உக்ரைன் அணிகள் நேற்று இரவு மோதின.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.

    இதில் குரூப் E பிரிவில் ஸ்லோவாக்கியா, உக்ரைன் அணிகள் நேற்று இரவு மோதின. ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் ஸ்லோவாக்கியா வீரர் இவான் முதல் கோல் அடித்து அசத்தினார். ஆனால், அதன்பின் உக்ரைன் அணியின் மைகோலா 54வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். அதன்பின் 80வது நிமிடத்தில் ரோமன் எரிம்சக் இன்னொரு கோல் அடித்தார்.

    இதன்மூலம் 2 - 1 என்ற கோல் கணக்கில் ஸ்லோவாக்கியாவை வீழ்த்தி உக்ரைன் வெற்றி பெற்றது.

    இதற்கு முந்தைய போட்டியில் தோல்வியை சந்தித்த உக்ரைன் அணி, தற்போது வெற்றி பெற்றுள்ளதால் அந்நாட்டின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×