என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கால்பந்து
ஐரோப்பிய கோப்பை கால்பந்து: இத்தாலி அணி வெற்றி
- ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அல்பேனியா கோல் அடித்தது.
- 11-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து இத்தாலி சமன் செய்தது.
டார்ட்மென்ட்:
17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று முன்தினம் தொடங்கியது.
24 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் ('ஏ' பிரிவு) ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
நேற்று நடந்த ஒரு ஆடடத்தில் சுவிட்சர்லாந்து 3-1 என்ற கோல் கணக்கில் அங்கேரியை ('ஏ') தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஸ்பெயின் -குரோஷியா அணிகள் மோதின.
இதில் ஸ்பெயின் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஸ்பெயின் அணிக்காக மொரட்டா (29-வது நிமிடம்) பேபியன் (32-வது நிமிடம்) கார்வஜல் (47-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.
நள்ளிரவு 12.30 மணிக்கு நடந்த போட்டியில் இத்தாலி- அல்பேனியா ('பி' பிரிவு) அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே அல்பேனியா கோல் அடித்தது. பஜ்ராமி இந்த கோலை அடித்தார்.
11-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து இத்தாலி சமன் செய்தது. பஸ்டோனி தலையால் முட்டி இந்த கோலை அடித்தார். இதனால் 1-1 என்ற சமநிலை ஏற்பட்டது.
16-வது நிமிடத்தில் இத்தாலி 2-வது கோலை அடித்தது. நிக்கோலா பாரெல்லா இந்த கோலை மிகவும் அற்புதமாக அடித்தார். இதன் மூலம் இத்தாலி 2-1 என்ற முன்னிலையை பெற்றது. முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இதே நிலை இருந்தது.
2-வது பாதி ஆட்டத்திலும் இதே நிலை தான் நீடித்தது. இத்தாலி வீரர்கள் 3-வது கோலை அடிக்க கிடைத்த பல வாய்ப்புகளை தவற விட்டனர். இதேபோல 2-வது கோலை அடித்து சமன் செய்ய அல்பேனியா வீரர்கள் கடைசி வரை போராடி னார்கள். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
இறுதியில் இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இத்தாலி 2-வது ஆட்டத்தில் ஸ்பெயினுடன் 20-ந் தேதியும், அல்பேனியா 2-வது போட்டியிலும் குரோஷியாவுடன் 19-ந் தேதியும் மோதுகின்றன.
இன்று நடைபெறும் ஆட்டங்களில் போலந்து- நெதர்லாந்து (மாலை 6.30 மணி), சுலோவெனியா- டென்மார்க் (இரவு 9.30), இங்கிலாந்து - செர்பியா (நள்ளிரவு 12.30) அணிகள் மோதுகின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்