search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    உலக கோப்பை கால்பந்து - தென் கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கானா
    X

    கோல் அடித்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீரர்

    உலக கோப்பை கால்பந்து - தென் கொரியாவை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கானா

    • முதல் பாதியில் கானா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
    • 2-வது பாதியில் தென் கொரியா 2 கோல் அடித்தும் 3-2 என்ற கணக்கில் தோற்றது.

    தோகா:

    கத்தாரில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இன்று நடைபெற்ற குரூப் எச் பிரிவு லீக் ஆட்டத்தில் கானா, தென் கொரியா அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் கானா அணியின் முகமது சாலிசு ஒரு கோலும், 34வது நிமிடத்தில் முகமது குதுஸ் ஒரு கோலும் அடித்தனர். இதனால் முதல் பாதியில் கானா அணி 2- என முன்னிலை பெற்றது.

    இதையடுத்து சுதாரித்துக் கொண்ட தென் கொரியா அணியின் சோ கு சங் இரண்டாவது பாதியில் 58 மற்றும் 61-வது நிமிடங்களில் தலா ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கானாவின் முகமது குதுஸ் 68- து நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினர்.

    இறுதியில், கானா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

    Next Story
    ×