search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    ஓவர் விஸ்வாசம் உடம்புக்கு ஆகாது.. மெஸ்ஸியின்  BODY GUARD செய்யும் அளப்பறைகள் - வீடியோ வைரல்
    X

    ஓவர் விஸ்வாசம் உடம்புக்கு ஆகாது.. மெஸ்ஸியின் BODY GUARD செய்யும் அளப்பறைகள் - வீடியோ வைரல்

    • அன்புத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க மெஸ்ஸி, மெய்ப்பாதுகாப்பாளர் அதாவது பாடிகார்ட் ஒருவரை நியமித்துள்ளார்.
    • அதவாது கிட்டத்தட்ட கருடன் பட சூரி போல் மெஸ்ஸி மீது யாரவது கை வைக்க முயன்றால் கூட உடனே தடுத்து விடுகிறார்.

    அர்ஜென்டினவைச் சேர்ந்த கால்பந்துலகின் ஜாம்பவானான லியோனல் மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பிரபலமாக இருப்பதில் பல்வேறு பிரச்சைனைகளும் உள்ளது. பொது நிகழ்ச்சிகள், விமான நிலையங்கள் என ரசிகர்களின் அன்புத் தொல்லையை பல பிரபலங்கள் சமாளிக்க வேண்டியுள்ளது. இதில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில், வேலியை எகிறிக் குதித்து மைதானதுக்குள்ளேயே வந்துவிடும் நிகழ்வுகளும் நடக்கத்தான் செய்கிறது.

    எனவே இவ்வாறான அன்புத் தொல்லைகளிலிருந்து தப்பிக்க மெஸ்ஸி, மெய்ப்பாதுகாப்பாளர் அதாவது பாடிகார்ட் ஒருவரை நியமித்துள்ளார். இப்போது விஷயம் என்னவென்றால் மெஸ்ஸியின் பாடிகார்டான யாசைன் சூகோ தனது அசாதாரணமான முன்னுணர்வால் அதாவது ரிப்ளெக்ஸ்கலால் மெஸ்ஸியிடம் ஓடிவரும் ரசிகர்களை அவர்கள் நெருங்குவதற்குள் சடாரென முன்வந்து தடுத்துவிடுகிறார்.

    Messi's bodyguard byu/Efficient_Sky5173 ininterestingasfuck

    அதவாது கிட்டத்தட்ட கருடன் பட சூரி போல் மெஸ்ஸி மீது யாரவது கை வைக்க முயன்றால் கூட உடனே தடுத்து விடுகிறார். அவரின் இந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. அமெரிக்க ராணுவத்தின் கடற்படையில் இருந்த யாசைன் சூகோ ஈராக்கிலும் , ஆப்கனிஸ்தானிலும் பணியாற்றியுள்ளார். மெஸ்ஸி கேப்டனாக இருக்கும் மியாமி கிளப் கால்பந்து அணியின் தலைவர் டேவிட் பெக்கம் ரெக்கமெண்டேஷனில் யாசைன் மெஸ்ஸியின் பாடிகார்ட் ஆகியுள்ளாராம். தனது சமூக வலைதள பக்கத்தில் ஒர்க் அவுட் வீடியோக்களை வெளியிட்டும் பிரபலமாகியுள்ளார் யசைன் சூகோ.

    Next Story
    ×