search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    கண்ணீர் மல்க பிரியா விடை பெற்ற இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி
    X

    கண்ணீர் மல்க பிரியா விடை பெற்ற இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி

    • இந்தியா- குவைத் மோதிய ஆட்டம் சமனில் முடிந்தது.
    • இந்த போட்டியுடன் இந்திய கால்பந்து வீரர் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து விடைபெற்றார்.

    கொல்கத்தா:

    23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்றுக்கான 2-வது ரவுண்டு ஆட்டங்கள் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ளது. கத்தார், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகியவை இந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும்.


    இந்த தொடரில் இன்று கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய அணி, குவைத்தை எதிர்கொண்டது. இதில் இந்தியா வெற்றி பெற்றால் உலகக் கோப்பை 3-வது ரவுண்டுக்கு முதல் முறையாக முன்னேறும் வாய்ப்பு உருவாகும் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் இரு அணிகள் மோதிய போட்டி விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளும் கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தனர். ஆனால் இறுதி வரை 2 அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் இந்த ஆட்டம் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

    இந்த போட்டியுடன் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் இருந்து சுனில் சேத்ரி விடைபெற்றார். போட்டி முடிந்து மைதானத்தை விட்டு செல்லும் போது கண்ணீருடன் வெளியேறினார். அவருக்கு ரசிகர்கள் பிரியா விடை கொடுத்தனர்.

    முன்னதாக மைதானத்தை சுற்றி சுனில் சேத்ரிக்கு நன்றி தெரிவித்து பேனர்கள், பாதகைகளை ரசிகர்கள் ஏந்தி இருந்தனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

    இந்திய வீரர்களில் அதிக போட்டிகளில் விளையாடி வீரர் சுனில். 151 போட்டிகளில் விளையாடி 94 கோல்களை பதிவு செய்துள்ளார். மேலும் 50 சர்வதேச கோல்கள் அடித்த முதல் இந்திய வீரர் சுனில் சேத்ரி ஆவார்.

    Next Story
    ×