search icon
என் மலர்tooltip icon

    கால்பந்து

    ஐரோப்பிய கோப்பையில் முதல்முறை.. போட்டி தொடங்கிய 23-வது நொடியில் கோல் அடித்து அசத்திய வீரர்
    X

    ஐரோப்பிய கோப்பையில் முதல்முறை.. போட்டி தொடங்கிய 23-வது நொடியில் கோல் அடித்து அசத்திய வீரர்

    • இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
    • அலெசாண்ட்ரோ பஸ்டோனி போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

    ஐரோப்பிய கோப்பை கால்பந்து தொடர் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஐரோப்பியாவை சேர்ந்த 24 அணிகள் விளையாடுகின்றன. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் இத்தாலி மற்றும் அல்பேனியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    இந்த போட்டி தொடங்கிய 23 நொடியிலேயே அல்பேனிய வீரர் நெடிம் பஜ்ராமி தனது அணிக்காக முதல் கோலை அடித்து அசத்தினார். இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட கோல் என்ற சாதனையாக அமைந்தது.

    இதைத் தொடர்ந்து இத்தாலி அணியின் அலெசாண்ட்ரோ பஸ்டோனி போட்டியின் 11 ஆவது நிமிடத்தில் தனது அணிக்காக கோல் அடித்தார். இது ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிவேக கோல் என்ற சாதனையானது.

    இந்த போட்டியில் இத்தாலி அணி 2-1 என்ற கணக்கில் அல்பேனியாவை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடர்களில் இத்தாலி அணி இரண்டாவது முறையாக பத்து போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

    முன்னதாக ஜூன் 1968 முதல் ஜூன் 1988 வரையிலான காலக்கட்டத்தில் இத்தாலி அணி தனது முதல் பத்து போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×