search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    இரட்டை குழந்தைகள் வளர்ப்பதில் உள்ள சவால்கள்.....
    X

    இரட்டை குழந்தைகள் வளர்ப்பதில் உள்ள சவால்கள்.....

    • கொஞ்சம் திட்டமிடல் மற்றும் உதவியுடன், இதற்கு நீங்கள் நல்ல முறையில் தயாராகலாம். இது ஒன்றும் அத்தனை மோசமானதல்ல.
    • குடும்பத்தினரிடம் இருந்து உணர்வு நோக்கிலான மற்றும் உடல்ரீதியிலான உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்

    ஒரு குழந்தையை வளர்ப்பதே பெரிய விஷயம் தான். அப்படி இருக்க இரண்டு மூன்று குழந்தைகளை வளர்ப்பது என்றால் எப்படி இருக்கும்? உங்களுக்கு பிறக்க இருப்பது இரட்டைக்குழந்தை என தெரிய வந்திருந்தால் காத்திருக்கும் சவாலை சமாளிக்கும் வழிகளை பார்ப்போம்.

    இரட்டை குழந்தைகள் அல்லது மூன்று குழந்தைகள் இரு மடங்கு மற்றும் மும்மடங்கு மகிழ்ச்சியை அளிக்கும் என சொல்லப்படுவது உண்மைதான் என்றாலும், சவால்களும் பல மடங்கு இருக்கும். ஒரே நேரத்தில் ஒரு குழந்தைக்கு மேல் வளர்க்கும் நிலைக்கு தயாராவது கடினம் என்றாலும், இந்த நிலையை எதிர்பார்த்தால் முதலில் அமைதியாக யோசியுங்கள். கொஞ்சம் திட்டமிடல் மற்றும் உதவியுடன், இதற்கு நீங்கள் நல்ல முறையில் தயாராகலாம். இது ஒன்றும் அத்தனை மோசமானதல்ல. இரட்டையர்கள் அல்லது மூன்று குழந்தைகள் வளர்வதை பார்ப்பது மற்றும் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது அற்புதமானது. வாழ்நாள் முழுவதும் இருக்க கூடிய விஷேச பந்தத்தை அவர்கள் பெற்றிருப்பார்கள்.


    இரட்டைக்குழந்தை பிறக்க இருப்பதை அறிந்தவுடன் மனைவியும், கணவரும் முதலில் உற்சாகம் அடைந்தாலும் துவக்கத்தில் இருந்தே கடினமாக இருக்கும். "பிரசவத்தில் இருந்து இது துவங்கியது. இரட்டை குழந்தைகளை சீக்கரமே பிரசவம் பார்க்க வேண்டும். உங்கள் சுரப்பிகளும் உச்சத்தில் இருக்கும். இரட்டைக்குழந்தைகள் பிறந்தவுடன் தூக்கமே இருக்காது. ஆர்ம்ப காலத்தில், குறிப்பாக பால் கொடுப்பது சவாலாக இருக்கும். ஒரு குழந்தைக்கு பால் கொடுத்த பின் இன்னொரு குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு தொடர்ந்து கொண்டே இருக்கும். உதவிக்கு அம்மா அல்லது கணவர் உடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

    வேலைக்கு செல்வதில் சிரமம் ஏற்படும். ஒரு குழந்தைக்கு மேல் பாலூட்டி வளர்க்க வேண்டிய நிலைக்கு ஏற்ப அம்மா தன்னை உடல்ரீதியாக தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளைக் கையாளுவதற்கு சகிப்புத்தன்மையும் பொறுமையும் தேவை.

    புதிய பொறுப்புக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள முயற்சிக்கும் போது ஒரு அம்மாவுக்கு மனநிலை மாற்றங்களும், உடல் ரீதியிலான சவால்களும் உண்டாகும். ஒரு குழந்தைக்கு மேல் இருக்கும் போது இது இன்னமும் சிக்கலாகும். குடும்பத்தினரிடம் இருந்து உணர்வு நோக்கிலான மற்றும் உடல்ரீதியிலான உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள். குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். முதல் சில மாதங்களில் பயிற்சி பெற நர்ஸ்கள் அல்லது ஆயாக்கள் இருப்பது மிகவும் உதவியாக இருக்கும். நிதி விஷயங்கள், உதவி அமைப்புகள் மற்றும் பணி சார்ந்த பிரச்சனைகளை முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் இவற்றால் பின்னர் மன அழுத்தம் ஏற்படுவதை தவிர்க்கலாம். குழந்தை பிறந்த பிறகு முதல் இரண்டு ஆண்டுகள் தான் உண்மையில் சவாலானது. சில நேரங்களில் வளர்ச்சி சார்ந்த பிரச்சனைகள் உருவாகலாம் என்பதால் இரட்டையர் அல்லது மூன்று குழந்தைகளுக்கு அதிக கவனம் தேவை. இந்த நேரத்தில் தான் குழந்தைகள் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி கொள்வதோடு, சூழலுக்கு ஏற்ப மாறிக்கொண்டு, சுவையும் வளர்த்துக்கொள்கின்றனர். ஏதேனுன் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் மன அழுத்தம் உண்டாகலாம். பல நேரங்களில் புதிய நோய்த்தொற்றுகள் தானாகவே சரியாகிவிடக்கூடும். ஆனால் நல்ல குழந்தை நல மருத்துவரை அறிந்து வைத்திருப்பது அவசியம்.


    இதேபோல் குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பிறகு அவர்களை மிகவும் பொறுமையாக கையாள வேண்டும். குறிப்பாக இரட்டைக் குழந்தைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது ஆரோக்கியமான பழக்கம் அல்ல. இது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் மூளையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். வளரும் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒப்பிடப்பட்ட இரட்டையர்கள் ஒருவருக்கொருவர் எதிர்மறையான எண்ணங்களை உருவாக்குகிறார்கள், இது அவர்களின் பிணைப்பு மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். பல இரட்டையர்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர் மற்றும் தொடர்ச்சியான ஒப்பீடுகளின் காரணமாக மற்ற இரட்டையர்களிடமிருந்து வெறுப்பு உணர்வை வளர்த்துக் கொள்கிறார்கள். எனவே குழந்தைகளின் உணர்வைக் கேட்டு அதற்கேற்ப அவர்களை ஊக்குவிக்கவும்.

    Next Story
    ×