search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    குழந்தைகளின் வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்றும் பாட்டி வைத்தியம்
    X

    குழந்தைகளின் வயிற்றுப்பூச்சிகளை வெளியேற்றும் பாட்டி வைத்தியம்

    • இயற்கை முறையில் மருந்து தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
    • இஞ்சியுடன் சுத்தம் செய்த வேப்பிலை சேர்த்து, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும்.

    குழந்தைகள் பால், சாக்லேட், இனிப்பு வகைகள் சாப்பிடுவதால் வயிற்றில் பூச்சிகள் இருக்கும். குழந்தைகள் முகத்தில் அங்கங்கே தேமல் இருந்தால், சாப்பாடு சரியாக உட்கொள்ளாமல் இருப்பது, அடிக்கடி வயிற்று வலியால் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாக பூச்சி வயிற்றில் இருக்கும்.

    இதற்கு 6 மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து டாக்டரிடம் காண்பித்து கொடுப்பது நல்லது. இயற்கை முறையிலும் மருந்து தயாரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். குழந்தைகள் என்றில்லை பெரியவர்களுக்கும் இந்த மருந்து சிறந்தது.

    தேவையான பொருட்கள்:

    இஞ்சி - 50 கிராம்

    வேப்பிலை - 20 இலைகள்

    தேன் - தேவையான அளவு

    உப்பு - ஒரு சிட்டிகை

    சர்க்கரை - சிறிதளவு

    செய்முறை:

    இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியுடன் சுத்தம் செய்த வேப்பிலை சேர்த்து, சிறிதளவு உப்பும் சேர்த்து நன்கு அரைக்கவும். அரைத்த விழுதை வடிகட்டவும்.

    வடித்த சாறை அப்படியே 15 நிமிடம் வைக்கவும், அடியில் நஞ்சு தங்கி இருக்கும். மேலோடு தெளிந்த சாறை மட்டும் எடுத்து கசப்பு தெரியாமல் இருக்க தேவைக்கு தேன் கலந்து குடிக்கவும்.

    கைக்குழந்தைகள் அதிக இனிப்பு சாப்பிட வாய்ப்பு இருக்காது தேவைபட்டால் அரை சங்கு ஊற்றலாம். 9 முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 சங்கு முழுவதும் கொடுக்கலாம்.

    அதற்கு மேற்பட்ட வயது மற்றும் பெரியவர்கள் கால் டம்ளர் குடிக்கலாம். சிறியவர்களுக்கு தேன் நன்றாக கலந்து கொடுக்கலாம். வயதிற்கு வந்த பெண்களுக்கு வரும் வயிறு உபாதைகளுக்கு இது சிறந்த மருந்து. கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடக்கூடாது. கர்ப்பம் தரிப்பதற்கு முன், குழந்தை பெற்ற பிறகு இதை அடிக்கடி செய்து குடிக்கலாம்.

    ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் அடிக்கடி இதை செய்து குடிக்கலாம்.

    Next Story
    ×