search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    கைக்குழந்தைகளுடன் பயணமா? ஓர் எளிய வழிகாட்டுதல்
    X

    கைக்குழந்தைகளுடன் பயணமா? ஓர் எளிய வழிகாட்டுதல்

    • கைக்குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம்.
    • டென்ஷன் இல்லாமல் பயணம் செய்வதை வாடிக்கையாக்கிகொள்ள வேண்டும்.

    வீட்டில் இருக்கும்போதே கைக்குழந்தைகளை சமாளிப்பது பெற்றோர்களுக்கு சவாலான விஷயம், அப்படி இருக்கையில் பயணத்தின்போது இன்னும் சவாலாகவே இருக்கும். ரெயில், பேருந்து, கார் என எதில் பயணம் செய்தாலும் குழந்தைகளை எப்படி சமாளிப்பது? அவர்களுக்காக அவசியம் எடுத்துச் செல்லவேண்டிய பொருட்கள் என்னென்ன? என்பது பற்றிய எளிய வழிகாட்டுதல் இங்கே...

    கைக்குழந்தையுடன் பயணம் செல்லும்போது எதை கொண்டு செல்ல வேண்டும். எதை விட்டுச்செல்லவேண்டும் என்பதை தீர்மானிப்பது கடினமாக இருக்கும். அதனால் எப்போது பயணம் மேற்கொண்டாலும் பொறுமை மிக அவசியம். குழந்தைகளுடனான பயணத்தின்பொது அவசர அவசரமாக கிளம்பாமல் அவர்களுக்குத் தேவையானதை மறக்காமல் எடுத்து வைத்தும் கொண்டு முடிந்த அளவு டென்ஷன் இல்லாமல் பயணம் செய்வதை வாடிக்கையாக்கி கொள்ள வேண்டும்.

    முதலில் குழந்தைகளுக்கு என்று தனியாக ஒரு பை வைத்துக்கொள்ள வேண்டும். அந்த பையில் பால் பாட்டில், தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு நீங்கள் பால் கொடுப்பதற்கு வசதியாக ஒரு துண்டும், குழந்தைக்கு ஒரு துண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வெந்நீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், சிறிய மற்றும் பெரிய அளவிலான கைக்குட்டைகள், பொம்மைகள், தொப்பி, குடை, டயப்பர் போன்ற அத்தியாவசிய பொருட்களை மறக்காமல் எடுத்து வைப்பது அவசியம். கைக்குழந்தை அடிக்கடி சிறுநீர் மற்றும் மலம் கழிக்கக்கூடும் என்பதால் சுத்தம் செய்ய தேவையான பேபி வைப்ஸ் போன்றவற்றையும் கட்டாயம் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இது தவிர, வழக்கமான ரெடிமேட் அல்லது துணி டயப்பர்களையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    சிறியதாக ஒரு மருந்து பெட்டி தயார் செய்து, அதில காய்ச்சல், இருமல், சளி, வாந்தி, பேதியை குறைக்கும் மாத்திரைகளை எப்போதும் போட்டு வைத்திருக்க வேண்டும். சில நேரங்களில் அது உங்களுக்கும் கூட உதவும்.

    சீரற்ற வானிலை மாற்றத்தை சமாளிக்கவும். நம் ஆரோக்கியத்தை காக்கவும், ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற சத்துள்ள பழங்களை ஜூஸ் போட்டு எடுத்து வைத்துக்கொள்ளலாம். எதிர்பார்க்காத நேரங்களில் குழந்தைகள் அழுகிற நிலைமை உருவாகும். ஆகையால் குழந்தைகளுக்கு விளையாட்டு காட்டும் பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது.

    கைக்குழந்தையுடன் பயணம் செய்யும்போது எப்போது வேண்டுமானாலும் உதவி தேவைப்படலாம். எனவே, செல்போனை முழுமையாக சார்ஜ் போட்டு வைத்திருக்க வேண்டும். கார், ரெயில் போன்றவற்றில் பயணம் செய்யும்போது மழலையர் பாடல்களை குழந்தைகளுக்கு பாடி காட்டலாம். அதை குழந்தைகளும், விரும்புவார்கள்.

    இதைத்தொடர்ந்து செய்ய உங்களுக்கு இனிமையான குரல் வேண்டும் என்பதில்லை உங்கள் குரலைக் கேப்பது தான் குழந்தையின் விருப்பம், ஆகவே இதுபோன்ற சில விஷயங்கனை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு கைக்குழந்தைகளுடன் உங்களது பயணத்தை இனிதாக தொடரலாம்.

    Next Story
    ×