search icon
என் மலர்tooltip icon

    உடற்பயிற்சி

    ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கணுமா? வாங்க...
    X

    ஒரே மாதத்தில் உடல் எடையை குறைக்கணுமா? வாங்க...

    • அதிக அளவு புரதமும், இரும்பு சத்தும் உள்ளது.
    • விட்டமின்-இ கண்கள் மற்றும், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

    நம் உடல் எடையை குறைக்கவும், நம் அழகை பராமரிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் உணவு பொருட்களில் இந்த கருப்பு கவுனி அரிசியும் ஒன்று. அரிசி உணவுகளுக்கு பதிலாக சிறுதானியங்கள், மருத்துவ குணங்கள் உள்ள மற்ற அரிசி வகைகள் என எடுத்துக்கொள்ளும்போது, உடல் ஆரோக்கியம் மேம்படும். அந்த வகையில், ஆரோக்கியமான கருப்பு கவுனி அரிசியில் கஞ்சி செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.

    கருப்பு கவுனி அரிசி கஞ்சி செய்முறை:

    கருப்பு கப்வுனி அரிசியை இரண்டு, மூன்று தடவை நன்றாக கழுவி அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும். ஊறவைத்த அரிசியை நிழலில் உலர்த்தி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த அரிசியை ஒரு வாணலியில் போட்டு மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும். வறுத்த மாவை ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் சேமித்து வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம்.

    கஞ்சி செய்வதற்கு ஒரு அடிகனமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் கருப்பு கவுனி அரிசி மாவினை போட்டு கஞ்சி பதத்திற்கு காய்ச்ச வேண்டும். (குறிப்பு ஒரு பங்கு மாவிற்கு 5 பங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்) காய்ச்சிய கஞ்சியில் காரம், அல்லது இனிப்பு சுவையுடன் பரிமாறலாம். இந்த கஞ்சியை தொடர்ந்து ஒரு மாதம் காலையும், மாலையும் குடித்து வந்தால் நிச்சயமாக ஒரே மாதத்தில் உடல் எடைகுறைவதை நீங்களே உணரலாம்.

    கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்

    மற்ற அரிசி வகைகளான வெள்ளை நிற அரிசி, பழுப்பு நிற அரிசி போன்றவற்றில் இருப்பதை விட கருப்பு கவுனி அரிசியில் குறைந்த அளவு மாவுச்சத்தும், அதிக அளவு புரதமும், இரும்பு சத்தும் உள்ளது. இதில் உள்ள விட்டமின்-இ கண்கள் மற்றும், சருமத்தின் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது.

    முக்கியமாக கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து உணவுக்குப் பின் ரத்த சர்க்கரை அளவு உயராமல் சீராக இருக்க உதவுவதுடன், செரிமானப் பிரச்சினைகள், வாயு சம்பந்தப்பட்ட பிரச்சினை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினையையும் சரி செய்யக்கூடியது. கூடவே நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள சக்தி வாய்த்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நீரிழிவு, இதய நோய், எடை அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளை தடுக்கவல்லது.

    Next Story
    ×